
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா யுஎஇ போட்டிக்குப் பிறகு பேட்டியளித்துள்ளார்.
இந்த சிறப்பான வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்தச் சுற்றில் இந்தியாவுடனும் மோதவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
யுஎஇ அணிக்கு எதிராக பாகிஸ்தான் 146/9 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஃபகர் ஸமான் 50, ஷாகீன் ஷா அப்ஃரிடி 29 ரன்களும் எடுத்தார்கள்.
சிறப்பான பந்துவீச்சினால், 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது.
மிடில் ஆர்டரில் கவனம் தேவை
பேட்டிங் குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா கூறியதாவது:
வெற்றிப் பெற்றாலும் எங்களது மிடில் ஆர்டரில் இன்னும் முன்னேற்றம் தேவை. அதில்தான் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அதைத்தவிர்த்துப் பார்த்தால், நாங்கள் சிறப்பாகவே விளையாடியுள்ளோம்.
எந்த சவாலுக்கும் தயார்
எங்களது சிறப்பான பேட்டிங்கை இதுவரை விளையாடவில்லை. எப்படி 150 ரன்களைக் கடப்பது என்பதற்கான வழிகளைக் கண்டறிந்து வருகிறோம்.
மிடில் ஆர்டரில் சரியாக விளையாடினால், எதிரணி யாராக இருந்தாலும் 170 ரன்கள் வரை எடுக்க முடியும்.
எதிரணி யாராக இருந்தாலும் கடந்த நான்கு மாதங்களாக எப்படி விளையாடுகிறோமோ அப்படித்தான் இனிமேலும் விளையாடுவோம். எந்த சவாலுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.