ஆஸி. மகளிரணியின் வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வி!

ஆஸி. மகளிரணியின் மிக மோசமான தோல்வி குறித்து...
australia womens cricket
ஆஸ்திரேலிய மகளிரணி... படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்திய மகளிரணிக்கு எதிரான போட்டியில் ஆஸி. மகளிரணி 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சண்டீகரில் நேற்று (செப். 17) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்து 49.5 ஓவர்களில் 292 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 

அடுத்து விளையாடிய ஆஸி. அணி 40.5 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதுவரை, ஆஸி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே இவ்வளவு மோசமாக தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமுறை ஒருநாள் உலகக் கோப்பை வென்ற அணியின் இந்தத் தோல்வி ஆஸி. ரசிகர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

ஆஸி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் மோசமான தோல்விகள்

  • 102 ரன்கள் வித்தியாசத்தில் - இந்தியாவுக்கு எதிராக, 2025

  • 92 ரன்கள் வித்தியாசத்தில் - இங்கிலாந்துக்கு எதிராக, 1973

  • 88 ரன்கள் வித்தியாசத்தில் - இந்தியாவுக்கு எதிராக, 2004

  • 84 ரன்கள் வித்தியாசத்தில் - தெ.ஆ. எதிராக, 2024

  • 82 ரன்கள் வித்தியாசத்தில் - நியூசிலாந்துக்கு எதிராக, 2008

Summary

Australia's 102-run loss to India in the second one-dayer in New Chandigarh was their heaviest by runs, and a 52-year low

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com