ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற குயிண்டன் டி காக்! மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில்..!

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடவுள்ளார்.
குயிண்டன் டி காக் (கோப்புப் படம்)
குயிண்டன் டி காக் (கோப்புப் படம்)
Published on
Updated on
2 min read

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடவுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையின்போது, வெள்ளைப் பந்து போட்டிகளில் கடைசியாக விளையாடியிருந்தார். அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு முடிவினை திரும்பப் பெற்று குயிண்டன் டி காக், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஷுக்ரி காண்ட்ராட் பேசியதாவது: வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான தென்னாப்பிரிக்க அணியில் குயிண்டன் டி காக் மீண்டும் இணைந்துள்ளது தென்னாப்பிரிக்க அணிக்கு மிகப் பெரிய உந்துதலாக உள்ளது. கடந்த மாதம் அவரது எதிர்காலம் குறித்து அவரிடம் பேசியபோது, நாட்டுக்காக விளையாடுவதற்காக அவர் தயாராக இருப்பது தெரிந்தது. அவர் எப்படிப்பட்ட வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மீண்டும் அணிக்காக விளையாடவுள்ளது தென்னாப்பிரிக்க அணிக்கு கண்டிப்பாக பலனளிக்கும் என்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக கேப்டன் டெம்பா பவுமா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அணியை அய்டன் மார்க்ரம் கேப்டனாக வழிநடத்துவார் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்

அய்டன் மார்க்ரம் (கேப்டன்), டேவிட் பெடிங்ஹம், கார்பின் போஸ்ச், டெவால்ட் பிரேவிஸ், டோனி டி ஸார்ஸி, ஸுபையர் ஹம்சா, சிமோன் ஹார்மர், மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ் (2-வது டெஸ்ட்டுக்கு மட்டும்), வியான் முல்டர், செனுரான் முத்துசாமி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டான், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரேநெலன் சுப்ராயன், கைல் வெரைன்.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்

டேவிட் மில்லர் (கேப்டன்), கார்பின் போஸ்ச், டெவால்ட் பிரேவிஸ், நண்ட்ரே பர்கர், ஜெரால்டு கோட்ஸீ, குயிண்டன் டி காக், டோனோவன் ஃபெரைரா, ரீஸா ஹென்ரிக்ஸ், ஜியார்ஜ் லிண்டே, குவெனா மாபாகா, லுங்கி இங்கிடி, காபா பீட்டர், லுஹான் டி பிரிட்டோரியஸ், ஆண்டைல் சிம்லேன், லிஸாத் வில்லியம்ஸ்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்

மேத்யூ பிரீட்ஸ்க் (கேப்டன்), கார்பின் போஸ்ச், டெவால்ட் பிரேவிஸ், நண்ட்ரே பர்கர், ஜெரால்டு கோட்ஸீ, குயிண்டன் டி காக், டோனி டி ஸார்ஸி, டோனோவன் ஃபெரைரா, ஜோர்ன் ஃபோர்டுயின், ஜியார் லிண்டே, குவெனா மபாகா, லுங்கி இங்கிடி, காபா பீட்டர், லுஹான் டி பிரிட்டோரியஸ், சினெதெம்பா.

Summary

South Africa's opening batsman Quinton de Kock has reversed his retirement and will return to play for the South African team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com