இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்! ஹாங் காங் சிக்ஸஸ் தொடரில்..!

ஹாங் காங் சிக்ஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
தினேஷ் கார்த்திக் (கோப்புப் படம்)
தினேஷ் கார்த்திக் (கோப்புப் படம்)படம் | ஐபிஎல்
Published on
Updated on
1 min read

ஹாங் காங் சிக்ஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் ஹாங்காங்கில் நடைபெறும் ஹாங்காங் சிக்ஸஸ் தொடர் வருகிற நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகள் டின் குவாங் சாலை பொழுதுபோக்கு திடலில் நடைபெறவுள்ளன.

மிகக் குறுகிய காலமே நடைபெறக்கூடிய இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக முன்னாள் இந்திய வீரரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹாங்காங் சிக்ஸர் தொடர்

ஹாங்காங் சிக்ஸர் என்பது கிரிக்கெட் அணியில் 11 பேருக்கு பதிலாக 6-பேர் கொண்ட அணியாக விளையாடுவர்.

இந்தத் தொடர் 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பை வென்றிருந்தது.

கடந்த முறை நடைபெற்ற தொடரில் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, ஹாங்காங், நேபாளம், நியூசிலாந்து, ஓமன், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகள் விளையாடின.

போட்டி விதிமுறைகள்

  • ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் இருப்பார்கள். ஒரு அணிக்கு அதிகபட்சமாக 5 ஓவர்கள் கொடுக்கப்படும். இறுதிப்போட்டியிலும் 5 ஓவர்கள் கொடுக்கப்படும். ஆனால், ஒரு ஓவருக்கு 6 பந்துகளுக்கு பதிலாக 8 பந்துகள் வீச வேண்டும்.

  • விக்கெட் கீப்பரைத் தவிர்த்து அணியில் உள்ள அனைவரும் பந்துவீசிக் கொள்ளலாம். அதே போல வைட், நோபாலுக்கு 2 ரன்கள் வழங்கப்படும்.

  • 5 ஓவருக்குள் 5 விக்கெட்டுகள் விழும் பட்சத்தில் அவுட்டாகாத பேட்டர் மட்டும் பேட்டிங் செய்வார். அணியில் அவுட்டான ஒரு வீரர் ரன் உதவிக்கு மட்டும் களத்தில் நிற்பார்.

  • ஒரு வீரர் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்ததும் ரிட்டயர்ஹர்ட் கொடுத்து வெளியேவரவேண்டும். ஒருவேளை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அவுட் ஆகும் பட்சத்தில் ரிட்டயர்ஹர்ட் ஆன வீரருக்கும் மறுவாய்ப்பு அளிக்கப்படும்.

Summary

Dinesh Karthik appointed captain of Team India for Hong Kong Sixes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com