பெங்களூரு: தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி! ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி!தங்க மோதிரத்தை விட தரமான பால்தான் குழந்தைகளுக்கு தேவை: தமிழிசை சௌந்தரராஜன் செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி! கோவை தனியார் பள்ளியில் தீ விபத்து! விடுமுறையால் தப்பிய மாணவர்கள்!போக்சோ வீரமணி வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும்! திமுக மனு

அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம்: வங்கதேசத்துக்கு 169 ரன்கள் இலக்கு!

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளதைப் பற்றி...

அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் அபிஷேக் சர்மா... - ஏபி

Published On :

சூப்பர் 4 சுற்றில் அபிஷேக் சர்மாவின் அதிரடி அரைசதத்தால், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்பட 4 அணிகள் மோதும் ஆசியக் கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது.

இந்தச் சுற்றில் தலா ஒரு வெற்றியுடன் இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை சர்வதேச கிரிக்கெட் திடலில் மோதின.

டாஸ் வென்ற வங்கதேச அணியின் பொறுப்பு கேப்டன் ஜேக்கர் அலி முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார்.

Story image

அதன்படி, அபிஷேக் சர்மா - ஷுப்மன் கில் இருவரும் களமிறங்கினார். அபிஷேக் நிதானமாக துவங்கினாலும், கில் அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

இருப்பினும், 19 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து வெளியேற திடீரென மூன்றாவது வரிசையில் களமிறங்கிய ஆல்ரவுண்டர் துபே 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஒருபக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியதுபோல் ஆடிய அபிஷேக் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிராக காட்டிய அதிரடியை இங்கும் தொடர்ந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 37 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் குவித்து ரன் அவுட்டானார்.

அடுத்தவந்த கேப்டன் சூர்யா, திலக் வர்மா இருவரும் தலா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடி காட்டிய ஹார்திக் பாண்டியா சில பந்துகளை பவுண்டரிக்கு ஓடவிட்டார். அவர் 29 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்து வீழ்ந்தார்.

முடிவில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. வங்கதேச அணித்தரப்பில் ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Summary

Abhishek Sharma''s swift fifty carries India to 168/6 against Bangladesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.