
ஆசியக் கோப்பையின் சூப்பர்-4 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி கேப்டன் ஜேக்கர் அலி முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான சூப்பா் 4 சுற்றில் இந்தியா - வங்கதேச அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை கிரிக்கெட் திடலில் மோதுகின்றன.
இந்தச் சுற்றில் இரு அணிகளுக்குமே இதுவரை தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருப்பதால், இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி, ஏறத்தாழ இறுதி ஆட்ட வாய்ப்பை உறுதி செய்து விடும் என்பதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இரு அணிகளும் இதுவரை 17 முறை மோதியிருக்க, வங்கதேசம் 1 ஆட்டத்தில் மட்டுமே வென்றிருக்கிறது. இதனால், இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது.
மேலும், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் வரிந்து கட்டிக் கொண்டிருப்பதால், இந்தப் போட்டியிலும் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், கேப்டன் சூர்யகுமார் யாதவ், சிவம் துபே உள்ளிட்டோர் அதிரடியைக்காண்பிக்க முனைப்பு காட்டுவார்கள்.
இந்திய அணிக்கு லீக் சுற்றில் ஓமன் அணி கடும் சவாலாக அமைந்தது போல, வங்கதேச அணியும் கடும் நெருக்கடி காட்டும் என்றே தோன்றுகிறது.
போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் கேப்டன் லிட்டன் தாஸ் காயமடைந்ததால், அவர் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஜேக்கர் அலி கேப்டன் பொறுப்பை வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்
அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
வங்கதேச அணி விவரம்
சைஃப் ஹாசன், தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமன், தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், ஜேக்கர் அலி(கேப்டன்), முகமது சைபுதீன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், நசும் அகமது, முஸ்தாபிசூர் ரஹ்மான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.