
உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அருந்ததி ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து வீராங்கனை ஹீதர் நைட் அடித்த பந்தினை கேட்ச் செய்ய முயன்றபோது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவக் குழு ஆடுகளத்துக்கு விரைந்தது. அருந்ததி ரெட்டி பெவிலியனுக்கு நடந்து செல்ல முயற்சி செய்தார். காலில் வலி அதிகமாக இருந்ததால், சக்கர நாற்காலி வரவழைக்கப்பட்டு அவர் பெவிலியனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான அருந்ததி ரெட்டிக்கு, உலகக் கோப்பைத் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பாக காயம் ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், அருந்ததி ரெட்டிக்கு காயம் எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. காயத்தின் தன்மையைப் பொருத்தே, அவர் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது தெரிய வரும்.
இதையும் படிக்க: இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக காத்திருக்கிறோம்: ஸ்மிருதி மந்தனா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.