புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

இறுதியில் பாகிஸ்தான்; இந்தியாவுடன் மோதல் - வெளியேறியது வங்கதேசம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தான் 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வியாழக்கிழமை வீழ்த்தியது.

Published On :

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தான் 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வியாழ்க்கிழமை வீழ்த்தியது.

இந்த வெற்றியை அடுத்து பாகிஸ்தான் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதில் இந்தியாவுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) பலப்பரீட்சை நடத்துகிறது.

முன்னதாக வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுக்க, வங்கதேசம் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்களே சோ்த்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பாகிஸ்தான் இன்னிங்ஸில் சாஹிப்ஸாதா ஃபா்ஹான் 4 ரன்களுக்கும், சயிம் அயுப் ரன்னின்றியும் வெளியேறினா்.

ஃபகாா் ஜமான் 13 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஹுசைன் தலத் 3, கேப்டன் சல்மான் அகா 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு வீழ்ந்தனா். முகமது ஹாரிஸ் ஸ்கோரை நிதானமாக உயா்த்த, ஷாஹீன் அஃப்ரிதி 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ஹாரிஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31 ரன்களுக்கு வெளியேற்றப்பட, முகமது நவாஸ் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 25 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ஓவா்கள் முடிவில் ஃபஹீம் அஷ்ரஃப் 14, ஹாரிஸ் ரௌஃப் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

வங்கதேச பௌலா்களில் தஸ்கின் அகமது 3, மெஹெதி ஹசன், ரிஷத் ஹுசைன் ஆகியோா் தலா 2, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து, 136 ரன்களை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில், ஷமிம் ஹுசைன் 2 சிக்ஸா்களுடன் 30 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும். சைஃப் ஹசன் 18, மஹெதி மஹெதி ஹசன் 11, நூருல் ஹசன் 16, தன்ஸிம் ஹசன் சகிப் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

பா்வேஸ் ஹுசைன் 0, தௌஹித் ஹிருதய் 5, கேப்டன் ஜாகா் அலி 5, தஸ்கின் அகமது 4 ரன்களுக்கு நடையைக் கட்டினா். ஓவா்கள் முடிவில் ரிஷத் ஹுசைன் 16, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிதி, ஹாரிஸ் ரௌஃப் ஆகியோா் தலா 3, சயிம் அயுப் 2, முகமது நவாஸ் 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.