
ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் அலீஸா ஹீலி இந்திய ரசிகர்களை சிஎஸ்கேவின் ஜெர்ஸியை அணிந்து வருமாறு கூறியது வைரலாகி வருகிறது.
மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் செப்.30 முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கின்றன.
ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸி. மகளிரணி ஏழு முறை வென்று வரலாறு படைக்க, இந்திய மகளிரணி ஒருமுறைக்கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆஸி. மகளிரணி கேப்டன் அலீஸா ஹீலி பேசியதாவது:
மஞ்சள் நிறமாக தோனியின் சிஎஸ்கே ஜெர்ஸியை இந்திய ரசிகர்கள் அணிந்து வந்தால் எனக்கு பிடிக்கும். அது மிகவும் சிறப்பாக இருக்கும். கூட்டத்தில் மஞ்சள் நிறமும் இருந்தால் நன்றாக இருக்கும்.
உங்களுக்குப் பிடித்தமான அணியாக எங்களை முத்திரைக் குத்தியுள்ளீர்கள். அதற்கு நன்றி. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம்.
இதுவரை விளையாடியதிலேயே மிகப்பெரிய உலகக் கோப்பையாக இருக்கும்.
இங்கு நல்ல ஆதரவும் ஒன்றில் மிகையான மனநிறைவும் கிடைக்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்த கலாசாரம் கிடையாது. நாங்கள் தோற்கும்போது எழுதுவார்கள். அதனால், இந்தியாவில் நல்ல அனுபவம்.
குழுவாக நல்ல அணியாக இருக்கிறோம். எங்களால் முடிந்த உழைப்பைக் கொடுத்து விளையாடுவோம் என்றார்.
முதல் போட்டியில் ஆஸி. அணி வரும் அக்.1ஆம் தேதி நியூசிலாந்துடன் மோதுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.