
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப் காயம் காரணமாக விலகியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப் காயம் காரணமாக விலகியுள்ளார்.
காயம் காரணமாக விலகியுள்ள அல்சாரி ஜோசப்புக்குப் பதிலாக இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ஜெடியா பிளேட்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜெடியா பிளேட்ஸை அணியில் சேர்ப்பதற்கு முன்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் ஜேசன் ஹோல்டரை அணியில் சேர்ப்பதற்காக அவரை அணுகியது.
ஆனால், மருத்துவக் காரணங்களுக்காக ஹோல்டர் அணியில் இணைய மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின், ஜெடியா பிளேட்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அண்மையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளார் ஷமர் ஜோசப் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.