
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் நாளை (அக்டோபர் 1) முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகியுள்ளார்.
பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மிட்செல் ஓவன் அடித்த பந்தினை தடுக்க முயன்று கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக விலகியுள்ள மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்டர் ஜோஷ் பிலிப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக ஜோஷ் இங்லிஷ் இந்த தொடரிலிருந்து விலகிய நிலையில், தற்போது மேக்ஸ்வெல்லும் விலகியுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: 140 கோடி மக்களுக்காக வெற்றி பெற நினைத்தேன்: திலக் வர்மா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.