உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (செப்டம்பர் 30) தொடங்கியது. குவாஹாட்டியில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது. மழை காரணமாக ஆட்டம் இடையிடையே தடைபட்டது. பின்னர், ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது.
முதலில் விளையாடிய இந்திய அணி 47 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா 8 ரன்களிலும், பிரதீகா ராவல் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், ஹர்லின் தியோல் 48 ரன்கள், கேப்டன் ஹர்மன் பிரீத் 21 ரன்கள், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 0 ரன், ரிச்சா கோஷ் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்த நிலையில், தீப்தி சர்மா மற்றும் அமன்ஜோத் கௌர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். தீப்தி சர்மா 53 பந்துகளில் 53 ரன்களும் (3 பவுண்டரிகள்), அமன்ஜோத் கௌர் 56 பந்துகளில் 57 ரன்களும் (5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்நே ராணா 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இலங்கை தரப்பில் இனோகா ரணவீரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். யுதேசிகா பிரபோதனி 2 விக்கெட்டுகளையும், அச்சினி குலசூர்யா மற்றும் சமாரி அத்தப்பத்து தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்திய அணி 125 ரன்களுக்குள்ளாக 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின், தீப்தி சர்மா மற்றும் அமன்ஜோத் கௌர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
ஒருநாள் போட்டிகளில் 125 ரன்களுக்குள்ளாக 6 விக்கெட்டுகளை இழந்து, அதன் பின் 250 ரன்களை இரண்டு முறை கடந்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இதற்கு முன்பாக, கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின், அந்தப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.
Summary
Playing their first match against Sri Lanka in the World Cup series, the Indian team scored 269 runs for the loss of 8 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்டாய்னிஸ், பிரப்சிம்ரன் அரைசதம் விளாசல்; ராஜஸ்தானுக்கு 223 ரன்கள் இலக்கு!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!

தீப்தி சர்மா முதல்முறையாக 5 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி!

அபிஷேக் சர்மா அதிரடி: பஞ்சாப் கிங்ஸுக்கு 220 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


