நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஐபிஎல் 2026: 154 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசிய குஜராத் வீரர்!

குஜராத் டைட்டன்ஸ் வீரர் அசோக் சர்மா வீசிய வேகப்பந்து குறித்து...

Ashok Sharma

அசோக் சர்மா. - படம்: குஜராத் டைட்டன்ஸ்.

Published On :

ஐபிஎல் 2026 சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் வீரர் அசோக் சர்மா அதிவேகமாக பந்துவீசியுள்ளார். ராஜஸ்தானி பிறந்த 23 வயதான அசோக் சர்மா 154.2 கிமீ/மணி வேகத்தில் பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 210/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 204/8 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் வீரர் அசோக் சர்மா 15.5ஆவது ஓவரின்போது ஓவர்களில் 154.2 கிமீ/மணி வேகத்தில் பந்து வீசி அசத்தினார். யார்க்கர் பந்தாக வீசிய இந்தப் பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆன்ரிச் நோர்க்யா 150.0 கி.மீ./மணி வேகத்தில் பந்துவீசி இருந்தார். கொல்கத்தாவின் கார்த்திக் தியாகி 149.7 கி.மீ./மணி வேகத்தில் பந்துவீசி இருந்தார்.

ஐபிஎல் வரலாற்றில் 2011ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடிய ஷான் டைட் 157.71 கி.மீ./மணி வேகத்தில் பந்துவீசி முதலிடத்தில் இருக்கிறார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்துவீசியவர்கள்

1. ஷான் டைட் - 157.71 கி.மீ./மணி (ராஜஸ்தான், 2011)

2. லாக்கி பெர்குசன் - 157.3 கி.மீ./மணி (குஜராத், 2022)

3. உம்ரான் மாலிக் - 157 கி.மீ./மணி (சன்ரைசர்ஸ், 2022)

4. மயங்க் யாதவ் - 156.7 கி.மீ./மணி (லக்னௌ, 2024)

5. ஆன்ரிச் நோர்க்யா- 156.2 கி.மீ./மணி (தில்லி கேபிடல்ஸ், 2020)

6. அசோக் சர்மா - 154.2 கி.மீ./மணி ( குஜராத் டைட்டன்ஸ், 2026)

Summary

GT vs RR: Ashok Sharma delivers fastest ball of IPL 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.