முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!
/

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஃப்ளின்டாஃப்பின் மகன் ராக்கியின் முதல் சதம்!

இங்கிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஃப்ளின்டாஃப்பின் மகன் ராக்கி ஃப்ளின்டாஃப் முதல் சதம் குறித்து...

News image

ராக்கி ஃப்ளின்டாஃப் - படம்: எக்ஸ் / லங்காஷயர் கிரிக்கெட்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 8:24 pm IST

இங்கிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஃப்ளின்டாஃப்பின் மகன் ராக்கி ஃப்ளின்டாஃப் (18 வயது) லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்துள்ளார்.

உலக அளவில் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஆண்ட்ரூ ஃப்ளின்டாஃப் இடம்பிடிப்பார் என்றே பல கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். தற்போது, இவரது மகனும் அதைப்போலவே உருவாகி வருகிறார்.

இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் கோப்பையில் ராக்கி ஃப்ளின்டாஃப் லங்காஷயர் அணியில் விளையாடி வருகிறார். இங்கிலாந்தின் யு19 கிரிக்கெட்டில் 16 வயதிலேயே சதம் அடித்து வரலாற்றில் இடம்பிடித்தார்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சாமர்செட்டுக்கு எதிராக நடைபெற்றுவரும் போட்டியில் இவர் தனது முதல் சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்தத் தொடரில் 293 ரன்கள் குவித்துள்ள இவரது சராசரி 73.25ஆக இருக்கிறது.

இந்தப் போட்டியில், ஐந்தாம் இடத்தில் களமிறங்கிய 65 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 76 பந்துகளில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 10 பவுன்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் இந்த அணி 443/6 ரன்கள் குவித்தது. லிஸ்ட் ஏ தொடரில் இந்த அணியில் அதிகபட்ச ஸ்கோர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஃப்ளின்டாஃப் இங்கிலாந்து லயன்ஸ் அணியில் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார். அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சிட்னி தண்டர் அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.

Summary

Rocky Flintoff blazes maiden Lancashire century off 65 balls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.