டி20 உலகக்கோப்பையை வெல்லும் கனவுடன், செங்கடல் கடந்து சாதிக்க ஆயத்தமாகியிருக்கிறது புதுமுக அணியான இத்தாலி!
கால்பந்தாட்டத்துக்காக உயிரைக் கொடுக்கும் அளவுக்குத் தீவிர ரசிகர் பட்டாளத்தைக் கொண்டதொரு ஐரோப்பிய நாட்டிலிருந்து, விரைவில் தொடங்கவுள்ள கிரிக்கெட் டி20 உலககோப்பையில் விளையாட ஆசியாவுக்கு வருகை தந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே, இத்தாலியில் கடந்த 18-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனைச் சேர்ந்த மாலுமிகள் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியிருந்தாலும், அந்த நாட்டு மக்களுக்கென்னவோ கால்பந்தாட்டம் மீதான ஆர்வம் இருந்தளவுக்கு கிரிக்கெட்டின் மீது இருக்கவில்லை. ஆனால், இரு நூற்றாண்டுகள் கழித்து இப்போது, கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் அளவுக்கு அவ்விளையாட்டில் வளர்ச்சியடைந்திருப்பது அசுர எழுச்சி!
வெய்ன் மேட்சென் தலைமையிலான இத்தாலிய கிரிக்கெட் அணி கனடா அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் அடைந்த வெற்றி, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு செய்தியைக் கடத்தியிருக்கிறது. இந்தத் தொடரில் எங்களை கத்துக்குட்டி அணியாக கருத வேண்டாமென்பதை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
முன்னதாக, கடந்த மாதம் அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடி வெற்றிபெற்றிருப்பது, இத்தாலி வீரர்களுக்கு நம்பிக்கையூட்டியிருக்கிறது. இத்தாலி அணியின் துணைப் பயிற்சியாளராக இருப்பவர் அயர்லாந்தின் முன்னாள் ஆல்-ரௌண்டரான கெவின் ஓ பிரைன் என்பது சுவாரசிய தகவல். தலைமைப் பயிற்சியாளராக வீரர்களுக்கு உத்வேகமளிக்கும் கனடாவின் அதிரடி பேட்ஸ்மேன் ஜான் டேசிசன் அணியை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்வதில் உறுதியுடன் இருக்கிறார்.
வீரர்களின் கிரிக்கெட் திறனை மேம்படுத்த, இத்தாலி கிரிக்கெட் சம்மேளனத்தின் (ஐசிஎஃப்) முன்னெடுப்பால் அவர்களுக்கு துபை மற்றும் இலங்கையில் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட்டில் இத்தாலி அணியின் தாக்கம் வருங்காலத்தில் பெரிதளவில் இருக்கும் என்பதற்கான சமிக்ஞையைக் காட்டுகின்றன.
இத்தாலி அணியில் ஜொலிக்கும் வீரர்கள் :
முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்-ரௌண்டரான ஜெ. ஜெ. ஸ்மட்ஸ் அணியின் நடுவரிசைக்குத் தூணாக விளங்குகிறார். மேலும், இடதுகை சுழற்பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மென்களுக்கு செக் வைப்பதிலும் கைதேர்ந்தவராவார்.
கேப்டன் வெய்ன் மெட்சென் 42 வயதைக் கடந்தாலும், அவரது சர்வதேச கிரிக்கெட் அனுபவம் அந்த அணியை நேர்த்தியாக வழிநடத்தி வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு துணை புரிகிறது.
டி20 உலகக்கோப்பையில் இத்தாலி அணியில் யாரெல்லாம் விளையாடவிருக்கிறார்கள் :
வெய்ன் மேட்சென் (கேப்டன்)
மார்கஸ் கேம்போபியனோ
கியன் பியரோ மேட்
ஸெய்ன் அலி
அலி ஹசன்
கிறிஷான் ஜோர்ஜ்
ஹாரி மனெண்ட்டி
அந்தோணி மோச்கா
ஜஸ்டின் மோச்கா
சையத் நக்வி
பெஞ்சமின் மனெண்ட்டி
ஜச்ப்ரீத் சிங்
ஜெ ஜெ ஸ்மட்ஸ்
கிராண்ட் ஸ்டீவார்ட்
தோமஸ் ட்ராகா
டி20 உலகக் கோப்பையில் இத்தாலி அணி விளையாடும் ஆட்ட அட்டவணை :
கொல்கத்தாவில் பிப். 9இல், ஸ்காட்லாந்து அணியை எதிர்த்து
மும்பையில் பிப். 12இல், நேபாள அணியை எதிர்த்து
கொல்கத்தாவில் பிப். 16இல், இங்கிலாந்து அணியை எதிர்த்து
கொல்கத்தாவில் பிப். 19இல், மேற்கு இந்தியத் தீவுகள் அணியை எதிர்த்து இத்தாலி வீரர்கள் களம் காண துடிப்புடன் ஆயத்தமாகிவிட்டனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஐரோப்பாவைச் சேர்ந்த இங்கிலாந்து அணி செலுத்திய ஆதிக்கம் அபாரம். வேறு எந்த ஐரோப்பிய அணிகளாலும் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிதாகச் சோபிக முடியவில்லை. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில் விளையாட ஐரோப்பாவிலிருந்து,
இங்கிலாந்து
அயர்லாந்து
நெதர்லாந்து
ஸ்காட்லாந்து
இத்தாலி என மொத்தம் 5 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
டி20 ஆட்டங்களைப் பொருத்தவரையில், குறுகிய காலத்தில் எந்த அணி அத்தருணத்தில் சிறப்பாகச் செயல்படுகிறதோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும். அந்த வகையில், பலம் வாய்ந்த அணிகளும் ஆட்டத்தின் போக்கில் ஒரு சில தருணங்களில் எடுக்கும் தவறான முடிவுகளால் அல்லது வீணடிக்கும் கேட்ச் வாய்ப்புகளால் அவர்களின் வெற்றி வாய்ப்பை பொசுக்கும் அளவுக்கு இட்டுச்செல்லும். இதுவே டி20 ஆட்டங்களின் சுவாரசியத்துக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று.
அப்படிப்பார்க்கும்போது, முறையான கிரிக்கெட் பயிற்சியுடன் துடிப்புடன் இருக்கும் இத்தாலி அணி, லீக் ஆட்டங்களில் எதிரணிகளுக்கு அதிர்சிச்சி வைத்தியம் அளித்து, அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறவும் வாய்ப்புள்ளது. ஐரோப்பாவிலும் இனி கிரிக்கெட் ஃபீவர்தான்..!
Summary
Italy will make their first-ever appearance in the ICC Men's T20 World Cup
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அறிமுக உலகக் கோப்பையில் அசத்திய எர்லிங் ஹாலண்ட்..! முதலிடத்தில் நார்வே அணி!

டி20 உலகக் கோப்பை: இலங்கைக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




