Rohit - Kohli, M.S. Dhoni.
ரோஹித் - கோலி, எம்.எஸ்.தோனி. படங்கள்: ஏபி, பிடிஐ.

20 வயதில் அனுபவமிக்க வீரர்கள் கிடைக்க மாட்டர்கள்..! ரோஹித், கோலி குறித்து தோனியின் பேட்டி!

2027-ல் கோலி, ரோஹித் விளையாடலாமா என்ற கேள்விக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் பதில்...
Published on

முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் தனது நேர்காணல் ஒன்றில் வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை 2027-ல் ரோஹித் சர்மா - விராட் கோலி இருவரும் விளையாடலாமா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 20 அல்லது 25 போட்டிகளில் ஒருவருக்கு அனுபவம் வந்துவிடாது எனக் கூறிய எம்.எஸ். தோனி உலகக் கோப்பை 2027-ல் ரோஹித் சர்மா, விராட் கோலி விளையாடுவார்களா என்பது அவர்களின் உடல் தகுதியும் பேட்டிங் செயல்பாடுகளே முடிவு செய்யும் எனக் கூறியுள்ளார்.

2027-ல் கோலி, ரோஹித் விளையாடலாமா?

டெஸ்ட், டி20யில் இருந்து ஓய்வுபெற்ற ரோஹித் சர்மா, விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். இந்நிலையில், நேர்காணலில் எம்.எஸ். தோனி இது குறித்து பேசியதாவது:

ஏன் கூடாது? ஏன் சிலர் உலகக் கோப்பை விளையாடக்கூடாது? என்னைப் பொறுத்தவரை வயது என்பது தகுதி கிடையாது. உடல்நலம், செயல்பாடுகள்தான் முக்கியமான தகுதி.

யாருமே எதுவும் சொல்லக்கூடாது என்றே நான் எப்போதும் நினைப்பேன். ஆனால், அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

24 வயதில் இந்தியாவுக்காக விளையாட தொடங்கினேன். அப்போது யாரும் எதுவும் சொல்லவில்லை. இப்பொது 10 அல்லது 20 ஆண்டுகள் விளையாடுகிறேன் எனில் யாரும் என்னிடம் வந்து வயது குறித்து பேசத் தேவையில்லை.

ரோஹித் , கோலி விளையாடுவார்களா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் நன்றாக விளையாடி, நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் ஏன் விளையாடக் கூடாது?

20 வயதில் அனுபவமிக்க வீரர்கள் கிடைக்க மாட்டர்கள்

அனுபவம் வாய்ந்த வீரர்கள் நமக்கு கிடைக்க மாட்டார்கள். ஒருவர் சச்சினாக இல்லாவிடில் 20 வயதில் அவர் அனுபவம் மிக்க வீரராக இருக்க வேண்டுமென எதிர்பார்க்க முடியாது.

16 அல்லது 17 வயதில் விளையாட தொடங்கினால் மட்டுமே அப்போது அனுபவம் வந்திருக்கும். 20 அல்லது 25 போட்டிகள் விளையாடியவர்கள் எல்லாம் அனுபவசாலிகள் எனக் கூற முடியாது.

80 அல்லது 85 போட்டிகள் விளையாடினால்தான் அனுபவம் வரும். அப்போதுதான் நமக்கு நமது உணர்வுகளை, அழுத்தங்களை எப்படி சமாளிப்பது என்று தெரியும்.

அனுபவமும் இளம் வீரர்களுக்குமான காம்பினேஷன்தான் முக்கியம் என்று நினைக்கிறேன். நன்றாக விளையாடினால் அவர்கள் இருப்பார்கள். இல்லையெனில் இருக்க மாட்டார்கள்.

ஒருவர் ஃபிட்டாக இல்லையெனில் அவரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் நீக்கலாம் அல்லது சரியாக விளையாடவிட்டால் நீக்கலாம். அதனால், ஒரே தகுதிதான். நன்றாக விளையாடி உடல் நலத்துடன் இருந்தால் தொடர்ந்து விளையாடுங்கள் என்றார்.

Rohit - Kohli, M.S. Dhoni.
இந்தியா மிகவும் ஆபத்தான அணி; ஆனால்... எம்.எஸ்.தோனி கூறுவதென்ன?
Summary

Former India captain Mahendra Singh Dhoni has thrown his weight behind senior batting stars Virat Kohli and Rohit Sharma, saying nobody should tell them whether they can continue or not in world cup 2027.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com