திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

யு19 உலகக் கோப்பை: சதமடித்த ஆப்கன் வீரர் ரொனால்டோ பாணியில் கொண்டாட்டம்!

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கன் வீரர் சதம் அடித்தது குறித்து...

News image

சதமடித்த மகிழ்ச்சியில் ஆப்கன் வீரர். - படம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

Updated On :4 பிப்ரவரி 2026, 4:15 pm IST

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கன் வீரர் ஃபைசல் ஷினோஜடா (17 வயது) சதம் அடித்து அசத்தினார்.

சதம் அடித்த மகிழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ பாணியில் கொண்டாடினார்.

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.

இந்தப் போட்டியில் மூன்றாம் இடத்தில் களமிறங்கிய ஆப்கன் வீரர் ஃபைசல் ஷினோஜடா அசத்தலாக விளையாடி சதம் அடித்தார். இந்த உலகக் கோப்பையில் இது அவரது 2-ஆவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ பாணியில் கொண்டாடிய அவர் பிறகு தனது மதத்தின்படி சஜ்தா முறையில் தரையில் குனிந்து ஆடுகளத்துக்கு நன்றி கூறினார்.

ஆப்கன் அணி 45 ஓவர்களில் 253-2 ரன்கள் எடுத்துள்ளது. ஃபைசல் ஷினோஜடா 104*, உசைருல்லாஹ் நியாசாய் 71* ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

Summary

In the semi-final match against India, Afghan player Faisal Shinozada impressed by scoring a century. In his celebration, he imitated the style of football legend Cristiano Ronaldo.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.