கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!

80 நாடுகளில் ஹிந்தி மொழி வர்ணனையில் ஒளிபரப்பாகும் டி20 உலகக் கோப்பை!

டி20 உலகக் கோப்பையில் ஹிந்தி மொழிக்கான முக்கியத்துவம் அதிகரிப்பு குறித்து...

The captains of the T20 World Cup teams.

டி20 உலகக் கோப்பை அணியின் கேப்டன்கள். - படம்: ஐசிசி

Published On :7 பிப்ரவரி 2026, 3:38 pm IST

டி20 உலகக் கோப்பையில் ஹிந்தி மொழி 80 நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்படுமென ஐசிசி தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் முதல்முறையாக முறை ஹிந்தி, உருது, நேபாளி மொழிகளில் இந்தப் போட்டிகளை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம் என ஐசிசி அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் இன்று முதல் மார்ச் 8ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

இந்தப் போட்டிகளை ரசிகர்கள் நேரலையில் அவர்களுக்குப் பிடித்தமான மொழிகளில் கண்டு களிக்கலாம்.

இந்தியாவில் ஜியோ ஸ்டார் நிறுவனம் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மூலமாகவும் டிஜிட்டலில் ஜியோ ஹாட்ஸ்டார் மூலமாகவும் ஒளிபரப்புகிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 8 உள்ளூர் மொழிகளில் வர்ணனைகள் செய்யப்படுகின்றன.

பாகிஸ்தான் நாட்டு போட்டிகளை உருது மொழி வர்ணனைகளில் ரசிகர்கள் பார்க்கலாம். பாகிஸ்தானில் பிடிவி, மைகோ தொலைக்காட்சிகளிலும் டிஜிட்டலில் தமாஷா, ஏஆர்ஒய் ஜிஆப், டப்மாட் செயலிலும் பார்க்கலாம்.

80 நாடுகளில் ஹிந்தி வர்ணனை

சுமார் 80 நாடுகளில் ஹிந்தி மொழி வர்ணனை ஒளிபரப்பாகும் என ஐசிசி அறிவித்துள்ளது.

  • ஆஸ்திரேலியாவில் அனைத்து இந்திய போட்டிகளும், அரையிறுதி, இறுதிப் போட்டிகளையும் பிரைம் விடியோவில் ஹிந்தியில் காணலாம்.

  • நியூசிலாந்தில் ஸ்கை ஸ்போர்ட்ஸில் இந்தியாவின் அனைத்து போட்டிகளையும் ஹிந்தி மொழி வர்ணனையில் காணலாம்.

  • ஐரோப்பாவில் இந்தியாவின் போட்டிகள், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளையும் ஹிந்தியில் ஸ்கை ஸ்போர்ட்ஸில் காணலாம்.

  • வட அமெரிக்காவில் வில்லோ டிவியில் அமெரிக்கா, கனடா மற்றும் அனைத்து போட்டிகளையும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் காணலாம்.

  • நேபாளத்தில் கன்டிபுர் டிவியில் ஹிந்தியிலும் நேபாளி மொழியில் சில போட்டிகளையும் காணலாம்.

Summary

The ICC Men’s T20 World Cup will be the most accessible cricket tournament ever, with commentary available in a variety of languages across global territories.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.