ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக் அரைசதம்; நேபாளத்துக்கு 185 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.
ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக் அரைசதம்; நேபாளத்துக்கு 185 ரன்கள் இலக்கு!
படம் | AP
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் இன்று (பிப்ரவரி 8) நடைபெற்று வரும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நேபாளம் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக் அரைசதம்; 185 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ஜேக்கோப் பெத்தேல் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹாரி ப்ரூக் அதிகபட்சமாக 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். வில் ஜாக்ஸ் 39 ரன்களும், ஜோஸ் பட்லர் 26 ரன்களும் எடுத்தனர்.

நேபாளம் தரப்பில் தீபேந்திர சிங் அய்ரீ மற்றும் நந்தன் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷேர் மல்லா மற்றும் சந்தீப் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நேபாளம் விளையாடி வருகிறது.

Summary

In the T20 World Cup match against Nepal, England, batting first, scored 184 runs for the loss of 7 wickets.

ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக் அரைசதம்; நேபாளத்துக்கு 185 ரன்கள் இலக்கு!
சூர்யகுமார் யாதவ் கிண்டல் செய்வதாக நினைத்தேன்: முகமது சிராஜ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com