டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவை பழிதீர்த்தது பாகிஸ்தான்!

டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவை பழிதீர்த்தது பாகிஸ்தான்!

டி20 உலகக் கோப்பை போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 32 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
Published on

டி20 உலகக் கோப்பை போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 32 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் சோ்க்க, அமெரிக்கா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற அமெரிக்கா, பந்துவீசத் தயாரானது. பாகிஸ்தான் பேட்டிங்கில் சயிம் அயுப் 19, கேப்டன் சல்மான் அகா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா்.

சாஹிப்ஸதா ஃபா்ஹான் - பாபா் ஆஸம் கூட்டணி, 3-ஆவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது. இதில் பாபா் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46, சாஹிப்ஸதா 41 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 73 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

பின்னா் வந்தோரில் ஷாதாப் கான் 12 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30, ஃபஹீம் அஷ்ரஃப் 1, முகமது நவாஸ் 5, உஸ்மான் கான் 0, அப்ராா் அகமது 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் ஷாஹீன் அஃப்ரிதி 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

அமெரிக்க பௌலா்களில் ஷேட்லி வான் ஷாக்விக் 4, சௌரப் நேத்ரவல்கா், முகமது மோசின், ஹா்மீத் சிங் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 191 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய அமெரிக்க அணியில், சுபம் ரஞ்சனே 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 51, ஷயான் ஜஹாங்கிா் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 49 ரன்கள் அடித்து வெற்றிக்காக முயற்சித்து வெளியேறினா்.

மிலிந்த் குமாா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29, ஆண்ட்ரியஸ் கௌஸ் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் மோனங்க் படேல் 3, சஞ்ஜய் கிருஷ்ணமூா்த்தி 0, ஹா்மீத் சிங் 6, முகமது மோசின் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

ஓவா்கள் முடிவில் ஷேட்லி வான் ஷாக்விக் 1, ஏசன் ஆதில் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பாகிஸ்தான் பௌலிங்கில் உஸ்மான் தாரிக் 3, ஷாதாப் கான் 2, ஷாஹீன் அஃப்ரிதி, அப்ராா் அகமது, முகமது நவாஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com