எல்லீஸ், ஸாம்பா மிரட்டல் பந்துவீச்சு..! ஆஸி. 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

டி20 உலகக் கோப்பையின் 14-ஆவது போட்டியில் வென்ற ஆஸி. அணி குறித்து...
Australia's Nathan ellis and Adam Zampa reacts after bowling a delivery during the T20 World Cup cricket match between Australia and Ireland in Colombo, Sri Lanka, Wednesday, Feb. 11, 2026. (AP Photo/Eranga Jayawardena)
நாதன் எல்லீஸ், ஆடம் ஸாம்பா. படங்கள்: ஏபி
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பையின் 14-ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி அயர்லாந்தை வீழ்த்தி வென்றது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கொழும்புவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 182/6 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய அயர்லாந்து அணி 16.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸி. அணியில் பேட்டிங்கில் ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 45 எடுக்க, அயர்லாந்து அணில் டாக்ரெல் 41 ரன்கள் எடுத்தார்.

அனுபவமற்ற பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் நாதன் எல்லீஸ், ஆடம் ஸாம்பா தலா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

Summary

Australia defeated Ireland in the 14th match of the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com