ஸ்டாய்னிஸ் அதிரடி: அயர்லாந்துக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸி.!
டி20 உலகக் கோப்பையின் 14-ஆவது போட்டி குறித்து...

மார்கஸ் ஸ்டாய்னிஸ்.
படம்: ஏபி

மார்கஸ் ஸ்டாய்னிஸ்.
படம்: ஏபி
டி20 உலகக் கோப்பையின் 14-ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 1820 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில், ஆஸி. அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கொழும்புவில் நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
இந்தப் போட்டியில் மிட்செல் மார்ஷ் இல்லாத காரணத்தினால் டிராவிஸ் ஹெட் கேப்டனாக செயல்பட்டார்.
ஜோஷ் இங்லீஷ் 37, மாட் ரென்ஷா 37, கேமரூன் க்ரீன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்ளென் மேக்ஸ்வெல் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பொறுப்பாக ஆடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 45 ரன்கள் எடுத்தார்.
அயர்லாந்து அணி சார்பில் மார்க் அடைர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...