பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

டி20 உலகக் கோப்பை: ரிக்கல்டன், டி காக் அதிரடி! ஆப்கனுக்கு 188 ரன்கள் இலக்கு!

ஆப்கனுக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

ரிக்கல்டன், டிக்காக்

PTI

Updated On :11 பிப்ரவரி 2026, 7:11 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 188 ரன்களை இலக்காக தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயம் செய்துள்ளது.

அகமதாபாத் நரேந்திர மோடி திடலில் நடைபெற்று வரும் குரூப் சுற்றில், குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் எய்டன் மார்கரம் மற்றும் குயிண்டன் டி காக் ஆகியோர் களமிறங்கினர். மூன்றாவது ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்து மார்கரம் ஏமாற்றம் அளித்தார்.

பின்னர், ஒன்றுசேர்ந்த டி காக் மற்றும் ரியான் ரிக்கல்டன் ஜோடி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை விளாசித் தள்ளினர். டி காக் 59 (41 பந்துகள்) மற்றும் ரிக்கல்டன் 61 (28 பந்துகள்) ஆட்டமிழந்தனர்.

தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது.

ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஒமர்சாய் 3 விக்கெட்டுகள் மற்றும் ரஷித் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.