

டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா அதிவேகமாக அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2026-ல் அதிவேகமாக அரைசதம் அடித்தவராக ஷனாகா புதிய சாதனையை உருவாக்கியுள்ளார்.
ஓமனை அடித்து நொறுக்கிய இலங்கை
ஓமனுக்கு எதிராக, இலங்கை அணி 20 ஓவர்களில் 225/5 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் ஷனாகா 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் அதிகபட்சமாக, குசல் மெண்டிஸ் 61, பவன் ரத்நாயகே 60 ரன்களும் எடுத்தார்கள்.
டி20 உலகக் கோப்பை, சர்வதேச டி20களில் இலங்கை அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்களில் ஷானாகா முதலிடம் வகிக்கிறார்.
சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் அவரேதான் இருக்கிறார்.
இலங்கை அணிக்காக அதிவேக அரைசதம் அடித்தவர்கள்
19 பந்துகளில் - தசுன் ஷானாக (ஓமனுக்கு எதிராக, 2026)
20 பந்துகளில் - தசுன் ஷானாக (இந்தியாவுக்கு எதிராக, 2023)
21- பந்துகளில் - ஜெயவார்தனே (கென்யாவுக்கு எதிராக, 2007)
21 பந்துகளில் - குமார் சங்ககாரா (இந்தியாவுக்கு எதிராக,2009)
முறியடிக்காத யுவராஜ் சிங் சாதனை
டி20 உலகக் கோப்பை மற்றும் சர்வதேச டி20யில் இந்திய வீரர் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே இதுவரை யாரும் முறியடிக்காத உலக சாதனையாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.