முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நேபாளத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இத்தாலி அபார வெற்றி!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.

The Italian team's opening players celebrate their victory

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இத்தாலி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் - படம் | AP

Published On :

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்ற போட்டியில் நேபாளம் மற்றும் இத்தாலி அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நேபாளம் முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய நேபாளம் இத்தாலி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஆரிஃப் ஷேக் 27 ரன்களும், கேப்டன் ரோஹித் பௌடல் 23 ரன்களும் எடுத்தனர். ஆசிஃப் ஷேக் 20 ரன்கள் எடுத்தார்.

இத்தாலி தரப்பில் கிறிஷன் கலுகாமேஜ் 3 விக்கெட்டுகளையும், பென் மனேண்ட்டி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அலி ஹாசன், ஜே ஜே ஸ்மட்ஸ் மற்றும் ஜஸ்பிரித் சிங் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இத்தாலி அபார வெற்றி!

124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இத்தாலி அணி, 12.4 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்களான ஜஸ்டின் மோஸ்கா மற்றும் அந்தோனி மோஸ்கா அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினர். ஜஸ்டின் மோஸ்கா 44 பந்துகளில் 60 ரன்களும் (5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), அந்தோனி மோஸ்கா 32 பந்துகளில் 62 ரன்களும் (3 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள இத்தாலி அணி, குரூப் சி பிரிவில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இத்தாலி, ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Italy won the T20 World Cup match against Nepal by a huge margin of 10 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.