பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

இரண்டாவது வெற்றி யாருக்கு? ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே மோதல்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே இடையேயான போட்டி குறித்து...

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 4:45 pm IST

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்குக்கு முன்னேறும் முக்கியமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் மோதவுள்ளன.

ஐசிசி டி20 உலகக் கோப்பை டி20 தொடர் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

குரூப் ஏ பிரில் பாகிஸ்தான், இந்தியா முதல் இரண்டு இடங்களிலும், குரூப் பி பிரிவில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா முதல் இடங்களிலும் உள்ளன. குருப் சி பிரிவில் மேற்கிந்தித் தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும், குரூப் டி பிரிவில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் உள்ளன.

குரூப் பி பிரிவில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்தில் உள்ளபோதிலும், அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள ஜிம்பாப்வேவுக்கு எதிராக நாளை (பிப்ரவரி 13) நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றாக வேண்டும்.

மிட்செல் மார்ஷ் விளையாடுவாரா?

ஆஸ்திரேலிய அணி அதன் முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அந்தப் போட்டியில் கேப்டன் மிட்செல் மார்ஷ் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக அணியை டிராவிஸ் ஹெட் கேப்டனாக வழிநடத்தினார்.

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஜோஷ் இங்லிஷ் மற்றும் மாட் ரென்ஷா சிறப்பாக செயல்பட்டனர். நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஸாம்பா அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

இரண்டாவது போட்டியிலும் கேப்டன் மிட்செல் மார்ஷ் விளையாடுவது சந்தேகம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக முன்னெச்சரிக்கையாக ஸ்டீவ் ஸ்மித் அணியுடன் இணைந்துள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஒருவர் கூட அரைசதம் எடுக்கவில்லை. இருப்பினும், அந்த அணி 182 ரன்கள் எடுத்தது. ஆனால், ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் மற்றும் நடுவரிசை வீரரான கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாட வேண்டியிருக்கும்.

நடப்பு டி20 தொடர் முழுவதும் கேப்டன் மிட்செல் மார்ஷ் விளையாட முடியாமல் போகலாம். ஆனால், அவருக்குப் பதிலாக அணியில் முன்னெச்சரிக்கையாக சேர்க்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித், அண்மைக் காலங்களில் டி20 போட்டிகளில் மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அது ஆஸ்திரேலிய அணிக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது. அண்மையில் பிக் பாஷ் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் ஸ்டீவ் ஸ்மித் 299 ரன்கள் குவித்தார்.

ஜிம்பாப்வே அணி எப்படி இருக்கிறது?

ஜிம்பாப்வே அணியை எளிதில் வென்று விடலாம் என நினைக்காமால் சவாலளிக்கும் விதமாக ஆஸ்திரேலிய அணி விளையாட வேண்டும். ஏனெனில், நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் அனைத்து அணிகளும் சமபலத்துடன் விளையாடுவதால், போட்டிகள் யாருக்கு சாதகமாக அமையும் என்பதை கணிப்பதே கடினமாக மாறியுள்ளது.

ஜிம்பாப்வே தனது முதல் போட்டியில் ஓமனை வீழ்த்தி அசத்தியது. ஓமன் மிகப் பெரிய அணியாக இல்லாவிட்டாலும், ஜிம்பாப்வே அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதன் காரணத்தினாலேயே அந்த அணியை வீழ்த்த முடிந்தது. ஓமனுக்கு எதிரான போட்டியில் கிடைத்த வெற்றியின் உத்வேகத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் காண்கிறது ஜிம்பாப்வே.

பந்துவீச்சை பொருத்தவரையில், ஜிம்பாப்வே அணியில் பிராட் ஈவன்ஸ், பிளெஸ்ஸிங் முஸராபானி மற்றும் ரிச்சர்ட் நிகராவா சிறப்பாக செயல்படுகின்றனர். மேலும், கேப்டன் சிக்கந்தர் ராஸாவின் பந்துவீச்சு அணிக்கு பலம் சேர்க்கிறது.

பேட்டிங்கில் பிரையன் பென்னட், டியான் மேயர்ஸ் மறும் பிரண்டன் டெய்லர் சிறப்பாக செயல்படுகின்றனர். சிக்கந்தர் ராஸா தனது பங்குக்கு பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டால், அணியில் பேட்டிங்கின் பலம் அதிகரிக்கும்.

Summary

Regarding the match between Australia and Zimbabwe in Group B of the T20 World Cup...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.