அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

டி20 உலகக் கோப்பை: டாஸ் வென்று ஆஸ்திரேலியா பந்துவீச்சு! அதிர்ச்சி அளிக்குமா ஜிம்பாப்வே?

டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளதைப் பற்றி...

News image

டாஸ்ஸின் போது டிராவிஸ் ஹெட் - சிக்கந்தர் ராஸா. - படம் : ஏபி

Updated On :13 பிப்ரவரி 2026, 11:15 am IST

டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் கொழும்புவின் பிரேமதசா கிரிக்கெட் திடலில் இன்று (பிப்.13) நடைபெறும் லீக் சுற்றின் 19-வது போட்டியில் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டன் டிராவிஸ் முதலில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் பிரதான கேப்டன் மிட்செல் மார்ஷ் உடற்தகுதி பெறாததால், இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. ஸ்டீவ் ஸ்மித் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இன்னும் அணியில் இணையாததால், பொறுப்பு கேப்டனாக டிராவிஸ் ஹெட் தொடர்கிறார்.

ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கொனோலி மற்றும் சேவியர் பார்லெட் இருவரும் உட்கார வைக்கப்பட்டு, பென் துவார்ஷுயிஸ் மற்றும் டிம் டேவிட் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜிம்பாப்வே அணியில் பிரண்டன் டெய்லர், ரிச்சர்ட் நகர்வாவுக்குப் பதிலாக டோனி முன்யோங்கா, கிரேம் க்ரீமர் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா

டிராவிஸ் ஹெட் (கேப்டன்), ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், மேட் ரென்ஷா, க்ளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, மேத்யூ குஹ்னெமன்.

ஜிம்பாப்வே

பிரையன் பென்னட், மருமாணி(விக்கெட் கீப்பர்), டியான் மியர்ஸ், சிக்கந்தர் ராஸா(கேப்டன்), ரியான் பர்ல், டோனி முன்யோங்கா, தஷிங்கா முசெகிவா, பிராட் எவன்ஸ், வெலிங்டன் மசகட்சா, கிரேம் க்ரீமர், ப்ளெஸிங் முசரபாணி.

Summary

Australia stand-in captain Travis Head won the toss and elected to bowl against Zimbabwe in their T20 World Cup match here on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.