தொடரும் ஆஸி.யின் மோசமான பேட்டிங்..! சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுமா?
டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி தோல்வியுற்றது எப்படி என்பது குறித்து...

கேமரூன் கிரீன் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜிம்பாப்வே வீரர். - படம்: ஏபி
டி20 உலகக் கோப்பையில், ஆஸ்திரேலிய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் கற்றுக்குட்டி அணியான ஜிம்பாப்வேயிடம் தோல்வியுற்று, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது.
தற்போதைக்கு, புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றியடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
குரூப் பி பிரிவில், ஆஸ்திரேலியாவும் ஜிம்பாப்வே அணியும் கொழும்பில் இன்று (பிப்.13) காலை 11 மணிக்கு மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீசியது. ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 169/2 ரன்கள் எடுத்தது. ஆஸி. 19.3 ஓவர்களில் 146க்கு ஆல் அவுட்டானது. இது குறித்து பார்ப்போம்...
பவர்பிளேவில் நிதானமும் அதிரடியும்
ஜிம்பாப்வே அணி பவர்பிளேவில் மிகவும் நிதானமாக விளையாடியது. பெரியதாக தூக்கி அடிக்காமல், 2 ரன்கள், 1 ரன்கள் என ஓடி ஓடி ரன்களைச் சேர்த்து, பவர்பிளே முடிவில் (6 ஓவர்களில்) 47/0 என்றிருந்தது.
மாறாக, ஆஸ்திரேலிய அணியினர் கன்னாபின்னாவென பவர்பிளேயில் பேட்டினை சுழற்றி, 6 ஓவர்களில் 38/ 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சமமான மிடில் ஓவர்
ஆஸ்திரேலிய அணி அதே 4 விக்கெட்டுகளுடன் 14 ஓவர்கள் வரை 105/4 ரன்கள் எடுத்தது. க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் மாட் ரென்ஷா இருவரும் நன்றாக விளையாடினார்கள்.
ஜிம்பாப்வே அணியும் 118-1 ரன்கள் எடுத்திருந்தது. கிட்டதட்ட ஒரே அளவான ரன்கள் இருந்த நிலையில், ஆஸி. அணி 19.3 ஓவர்கள் ஆல் அவுட்டாக காரணம் பவர்பிளேவில் 4 விக்கெட்டுகளை இழந்ததுதான்.
டெத் ஓவரில் அதிரடியும் ஆல் அவுட்டும்
வெற்றி பெற ஆஸ்திரேலிய அணிக்கு ரன் ரேட் அதிகமாக இருந்த காரணத்தினால், பேட்டர்கள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகி ஆட்டமிழந்தார்கள்.
ஜிம்பாப்வே அணியிடம் விக்கெட் இருந்த தைரியத்தினால் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்கள்.
சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுமா?
இதே மாதிரிதான் 2024 உலகக் கோப்பையிலும் ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.
இதுவரை 160-க்கும் அதிகமான இலக்கை சேஸ் செய்ய முடியாவில் 7 முறை டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி தோல்வியுற்றுள்ளது.
இதிலிருந்து தெரிவது ஒன்றுதான். ஆஸ்திரேலிய அணியின் தேர்வு முறையும் பேட்டர்களின் அணுகுமுறையும் மோசமாக இருப்பதாலேயே இவ்வாறு நடக்கிறது.
மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறும். அதற்கு, ஸ்டீவ் ஸ்மித் பிளேயிக் லெவனில் வர வேண்டும்.
இன்னொறு, அளவுக்கு அதிகமான ஒரே மாதிரியான ஆல் ரவுண்டர்களில் சரிபாதியை (ஸ்டாய்னிஸ், கிரீன், மார்ஷ், டிம் டேவிட்) நீக்காவிட்டாலும் ஆஸி.க்கு ஆபத்து தொடர்ந்து கொண்டேதான் இருக்குமென கணிக்கப்படுகிறது!
Summary
Australia is in a very difficult situation after losing to Zimbabwe by 23 runs in the T20 World Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






