8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஜிம்பாப்வே அணியில் பிரண்டன் டெய்லர் விலகல்..! பென் கரண் சேர்ப்பு!

ஜிம்பாப்வே அணியின் மூத்த வீரர் பிரண்டன் டெய்லர் விலகல் குறித்து...

 Brendan Taylor, Ben Curran.

பிரண்டன் டெய்லர், பென் கரண். - படங்கள்: எக்ஸ் / ஜிம்பாப்வே கிரிக்கெட்.

Published On :13 பிப்ரவரி 2026, 5:31 pm IST

ஜிம்பாப்வே அணியின் மூத்த வீரர் பிரண்டன் டெய்லர் (40 வயது) காயம் காரணத்தினால் நடப்பு டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

விக்கெட் கீப்பர் பேட்டரான இவருக்குப் பதிலாக பென் கரண் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணி தனது முதல் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றபோது விளையாடிய பிரண்டன் டெய்லர் (40 வயது) தற்போது தசைப் பிடிப்பு காரணங்களால் விலகியுள்ளார்.

கடந்த 2004-ல் அறிமுகமான பிரண்டன் டெய்லர் இதுவரை 36 டெஸ்ட், 207 ஒருநாள், 59 டி20 போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடியுள்ளார்.

இன்று காலையில் நடந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இங்கிலாந்தைச் சேர்ந்த பென் கரண் சமீபத்தில் ஜிம்பாப்வே அணியில் சேர்ந்தார். இவர் சாம் கரணின் சகோதரர் என்பதும் கவனிக்கத்தக்கது.

பென் கரண் நல்ல ஆல்ரவுண்டர் என்பதால், ஜிம்பாப்வே அணிக்கு கூடுதல் பலத்தைச் சேர்ப்பார் எனக் கருத்தப்படுகிறது.

Zimbabwe veteran Brendan Taylor ruled out of T20 WC due to injury, Ben Curran named as replacement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.