மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 175 ரன்கள் குவிப்பு; வரலாற்றை மாற்றியமைக்குமா நியூசிலாந்து?

டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 175 ரன்கள் எடுத்துள்ளது.

News image
- படம் | AP
Updated On :14 பிப்ரவரி 2026, 3:48 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 175 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் விளையாடியது.

வரலாற்றை மாற்றியமைக்குமா நியூசிலாந்து?

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் மார்க் சாப்மேன் அதிகபட்சமாக 26 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டேரில் மிட்செல் 32 ரன்களும், ஃபின் ஆலன் 31 ரன்களும் எடுத்தனர். ஜேம்ஸ் நீஷம் 23 ரன்கள் எடுத்தார்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சென் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லுங்கி இங்கிடி, கேசவ் மகாராஜ் மற்றும் கார்பின் போஷ்ச் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டிகள் அனைத்திலும் தென்னாப்பிரிக்க அணியே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2007, 2009, 2010 மற்றும் 2014 ஆண்டுகளில் என மொத்தமாக நான்கு போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடியுள்ள நியூசிலாந்து அணி ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை.

கடந்த 2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு முதல் முறையாக டி20 உலகக் கோப்பைத் தொடரின் போட்டியில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று, நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்றைத் தொடரப் போகிறதா? அல்லது தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வரலாற்றை மாற்றியமைக்கப் போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.