ஜிம்பாப்வே - அயர்லாந்து இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றோடு வெளியேறியது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 5 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இன்னும் மூன்று இடங்களுக்கு போட்டி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று (பிப்.17) இலங்கையின் பல்லேகலேயில் நடைபெற்ற ஜிம்பாப்வே - அயர்லாந்து இடையேயான போட்டியில் ஒரு பந்துகூட வீசப்படமால் முழுப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகிய இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் அந்த அணியும், தோல்வியைத் தழுவினால், ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணியும் தகுதி பெறும் என்ற சூழலில் இன்றையப் போட்டி மழையால் முழுமையும் பாதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது.
லீக் சுற்றில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேவிடம் அதிர்ச்சித் தோல்வியையும், இலங்கையிடம் தோல்வியையும் தழுவியது. அயர்லாந்திடம் மட்டும் ஒரு வெற்றியைப் பெற்றுள்ள ஆஸ்திரேலியா பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறும் ஓமனுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது.
குரூப்-பி பிரிவில், 6 புள்ளிகளுடன் இலங்கை அணி முதலிடத்தையும், 5 புள்ளிகளுடன் ஜிம்பாப்வே அணி இரண்டாம் இடத்தையும் பிடித்து சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன், ஐசிசி ஒரு நாள் சாம்பியன், டி20 சாம்பியன் என பல்வேறு படங்களை வென்றுள்ள வலிமை வாய்ந்த ஆஸ்திரேலிய அணி கடந்த 17 ஆண்டுகளில் லீக் சுற்றோடு முதல்முறையாக வெளியேறியது.
சூப்பர் 8 சுற்றில் இதுவரை 7 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் - நமீபியா இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றால் அந்த அணியும், தோல்வியடைந்தால் அமெரிக்கா அணியும் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.
Summary
Zimbabwe on Tuesday entered the Super 8 stage of the T20 World Cup after their crucial Group B match against Ireland was washed out due to rain, a result that also eliminated former champions Australia and Ireland from the tournament.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூன்றாவது போட்டியிலும் வெற்றி; ஜிம்பாப்வேவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அசத்தல்!

வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்தியா பந்துவீச்சு!

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

சூப்பர் 8 சுற்றுக்கு 7 அணிகள் தகுதி; கடைசி இடம் யாருக்கு?
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


