கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மைக்கேல் ஜோன்ஸ் அதிரடி; நேபாளத்துக்கு 171 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது.

News image
அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் மைக்கேல் ஜோன்ஸ்- படம் | AP
Updated On :17 பிப்ரவரி 2026, 4:01 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் நேபாளம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஸ்காட்லாந்து முதலில் பேட் செய்தது.

மைக்கேல் ஜோன்ஸ் அதிரடி; நேபாளத்துக்கு 171 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் ஜோன்ஸ் 45 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜார்ஜ் முன்சே 27 ரன்களும், பிரண்டன் மெக்முல்லன் 25 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நேபாளம் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சோம்பல் கமி, 4 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நந்தன் யாதவ் இரண்டு விக்கெட்டுகளையும், ரோஹித் பௌடல் மற்றும் குஷால் புர்டெல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நேபாளம் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.