

டி20 உலகக் கோப்பையின் 36-ஆவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
குரூப் ஏ பிரிவில் கடைசி போட்டியாக நெதர்லாந்தும் இந்தியாவும் மோதுகின்றன.
குரூப் ஏ பிரிவில் இந்திய அணி ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகிவிட்டது. பாகிஸ்தானும் தேர்வாகியதால், இந்தப் போட்டியில் இந்தியா தோற்றாலும் எந்தப் பிரச்னையும் இல்லை என்ற நிலையில் களமிறங்குகிறது.
மாறாக, நெதர்லாந்து அணி மூன்றில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளதால், இந்தப் போட்டியில் வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குல்தீப் யாதவ் பதிலாக அர்ஷ்தீப் சிங், அக்ஷர் படேலுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தரும் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.
நெதர்லாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.