ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஒருநாள் கோப்பைக்கான ஆஸ்திரேலியாவில் ஒரே சீசனில் நான்கு சதங்கள் விளாசி தலைசிறந்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
ஆஸி. வீரர் மார்னஸ் லபுஷேன் (31 வயது) 177 முதல்தர போட்டிகளில் 12,645 ரன்கள் குவித்துள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய லபுஷேன் சமீபத்தில் ஆஷஸ் தொடரில் இடம் பிடித்தார். 4-1 என ஆஸ்திரேலிய அணி வென்றது.
தற்போது, உள்ளூர் போட்டிகளில் குயின்ஸ்லேண்ட் விளையாடி வரும் லபுஷேன் சௌத் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 126 ரன்கள் குவித்தார்.
ஒருநாள் கோப்பையில் இந்த சீசனில் நான்காவது சதத்தினை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக ஒருநாள் கோப்பைப் போட்டிகளில் ஒரே சீசனில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியல்:
1. பில் ஜாக்கீஸ் - 4 சதங்கள் (2005-06) - 100, 152*, 158*, 138.
2. பிராட் ஹாட்ஜ் - 4 சதங்கள் (2009-10) - 114*, 113, 139, 136*.
3. டேனியல் ஹக்ஸ் - 4 சதங்கள் (2022-23) - 117, 139, 101, 126.
4. மார்னஸ் லபுஷேன் - 4 சதங்கள் (2025-26) - 130, 105, 101, 126.
அடுத்தாண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் மார்னஸ் லபுஷேன் முக்கியமான பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Marnus Labuschagne joins an elite group in One Day Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!

சஹீரா, புர்னா பாய் கூட்டணியில் கால்பந்து உலகக் கோப்பைக்கான பாடல்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




