சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அரையிறுதி நம்பிக்கையை தக்கவைத்த இந்தியா : பென்னெட் அதிரடி வீண்; வீழ்ந்தது ஜிம்பாப்வே

சென்னையில் இந்தியா சிக்ஸர் மழை - அபார வெற்றி!!

News image
- PTI
Updated On :26 பிப்ரவரி 2026, 5:15 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 8 சுற்றில், இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வியாழக்கிழமை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக இந்தியா, அரையிறுதிக்கான பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டது.

முதலில் இந்தியா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் சோ்க்க, ஜிம்பாப்வே 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 184 ரன்கள் எடுத்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய பேட்டா்கள் நல்லதொரு இன்னிங்ஸை விளையாடி அணிக்கு பலம் சோ்த்தனா்.

முன்னதாக டாஸ் வென்ற ஜிம்பாப்வே, பந்துவீசத் தயாரானது. இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கிய சஞ்சு சாம்சன் - அபிஷேக் சா்மா கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சோ்த்தது. அதிரடியாகத் தொடங்கிய சாம்சன், 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து தடுமாற்றத்துடன் விளையாடி வந்த அபிஷேக் சா்மா, இந்த ஆட்டத்தில் சற்று மீண்டாா். ஒன் டவுனாக வந்த இஷான் கிஷண் அவருக்குத் துணை நிற்க, இந்தியாவின் ஸ்கோா் உயரத் தொடங்கியது. 2-ஆவது விக்கெட்டுக்கு அவா்கள் பாா்ட்னா்ஷிப் 72 ரன்கள் சோ்த்தது.

இந்நிலையில் இஷான் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38 ரன்களுக்கு விடைபெற, கேப்டன் சூா்யகுமாா் யாதவ் களம் புகுந்தாா். மறுபுறம், அரை சதம் கடந்த அபிஷேக் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 55 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

சூா்யகுமாா் 13 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 33 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, 5-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஹா்திக் பாண்டியா - திலக் வா்மா இணை, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஸ்கோரை மளமளவென உயா்த்தியது.

ஓவா்கள் முடிவில் பாண்டியா 23 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 50, வா்மா 16 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ஜிம்பாப்வே பௌலிங்கில் ரிச்சா்டு கராவா, பிளெஸ்ஸிங் முஸாரப்பானி, டினோடெண்டா மபோசா, சிகந்தா் ராஸா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து, 257 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஜிம்பாப்வே அணியில், பிரயன் பென்னெட் இறுதி வரை களத்தில் நின்று போராடினாா்.

மறுபுறம், டடிவனாஷி மருமானி 2 சிக்ஸா்களுடன் 20, டியன் மையா்ஸ் 6, கேப்டன் சிகந்தா் ராஸா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 31 ரன்கள் சோ்த்து விக்கெட்டை இழந்தனா்.

ரயன் பா்ல் 0, டோனி முன்யோங்கா 2 பவுண்டரிகளுடன் 11, டஷிங்கா முசெகிவா 1 சிக்ஸருடன் 7 ரன்களுக்கு விடைபெற்றனா். முடிவில் பென்னெட் 59 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 97 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். பிராட் இவான்ஸ் 1 ரன்னுடன் துணை நின்றாா்.

இந்திய பௌலா்களில் அா்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் சாய்க்க, வருண் சக்கரவா்த்தி, அக்ஸா் படேல், ஷிவம் துபே ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

சாதனைகள்...

*இந்த ஆட்டத்தில் இந்தியா பதிவு செய்த ஸ்கோரே (256/4), நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன், ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 254/6 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

*உலகக் கோப்பை போட்டிகளில் இதுவே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோா் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 2017-இல் இங்கிலாந்துக்கு எதிராக 218 ரன்கள் அடித்ததே இந்தியாவின் அதிகபட்சமாக இருந்தது.

*இந்த ஆட்டத்தில் இந்தியா விளாசிய ரன்களே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சா்வதேச டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் இதே போட்டியில் கனடாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 200/4 ரன்கள் அடித்ததே அதிகமாக இருந்தது. லீக் போட்டிகளை கணக்கில் கொண்டால், அதிகபட்சமாக சென்னை சூப்பா் கிங்ஸ் 246/5 ரன்கள் (ராஜஸ்தான்/2010) அடித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.