

புதியதாக பிறந்துள்ள 2026 ஆம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் ஆண்டாகவே அமைந்திருக்கிறது.
2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2026 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. காலண்டர் மாறியிருந்தாலும், மாறாத கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகவே மாறியிருக்கிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் இந்திய ஆடவர் அணியும், ஒருநாள் உலகக் கோப்பை வென்ற வேட்கையுடன் டி20 உலகக் கோப்பையை வெல்ல முனைப்புக் காட்டும் மகளிர் அணியும், இளம் வீரர்களுக்கான உலகக் கோப்பையும் நம்மை மகிழ்விக்க காத்திருக்கின்றன.
டி20 உலகக் கோப்பை
இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கும் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நடப்பு சாம்பியனான இந்திய அணி, டி20-ல் வலுவான அணியாக இருப்பதாலும், உள்ளூர் போட்டிகள் நடைபெறுவதும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுமா என ரசிகர்கள் ஆரவாரத்தில் உள்ளனர்.
டி20 அணி வலுவாக இருந்தாலும், கேப்டன் சூர்யகுமார் யாதவின் ஆட்டம் மோசமான நிலையில் இருப்பதால், அவரின் பதவியை தீர்மானிக்கும் தொடராகவும் இந்த உலகக் கோப்பைத் தொடர் அமைந்திருக்கிறது.
மகளிர் உலகக் கோப்பை
ஜனவரி 9 மகளிருக்கான பிரீமியர் லீக் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்துதான் ஆடவருக்கான உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. ஜூன் 12 ஆம் தேதி ஐசிசி மகளிருக்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் தொடங்கவிருக்கின்றன. ஒருநாள் உலகக் கோப்பை வென்ற அதே வேகத்தில் டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய மகளிரணியும் முனைப்புக் காட்டி வருகிறது.
19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை
இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரங்கள் விளையாடும் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
2026 ஆம் ஆண்டில் மிகப் பெரிய கிரிக்கெட் தொடர்கள்
மகளிர் பிரீமியர் லீக் - ஜனவரி 9 - பிப்ரவரி 5
யு-19 உலகக் கோப்பை - ஜனவரி 15 - பிப்ரவரி 6
ஐசிசி டி20 உலகக் கோப்பை - பிப்ரவரி 7 - மார்ச் 8
ஐபிஎல் - மார்ச் 26 - மே 31
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை - ஜூன் 12 - ஜூலை 5
இந்திய ஆடவர் அணிக்கான போட்டி அட்டவணைகள்
ஜனவரி மாதத்தில்...
ஒரு நாள் போட்டிகள் - நியூசிலாந்து அணியுடன்
ஜனவரி 11 – வதோதரா
ஜனவரி 14 – ராஜ்கோட்
ஜனவரி 18 – இந்தூர்
டி20 போட்டிகள்
ஜனவரி 21 – நாக்பூர்
ஜனவரி 23 – ராய்ப்பூர்
ஜனவரி 25 – குவஹாத்தி
ஜனவரி 28 - விசாகப்பட்டினம்
ஜனவரி 31 - திருவனந்தபுரம்
பிப்ரவரி மாதத்தில்... ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்
பிப்ரவரி 7 - மார்ச் 8
மார்ச் முதல் மே மாதம் வரை... ஐபிஎல் தொடர்
மார்ச் 26 முதல் மே 31 வரை
ஜூலை மாதத்தில்... இங்கிலாந்து சுற்றுப்பயணம்
டி20 போட்டிகள்
ஜூலை 1 – செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்
ஜூலை 4 - மான்செஸ்டர்
ஜூலை 7 – நாட்டிங்ஹாம்
ஜூலை 9 – பிரிஸ்டல்
ஜூலை 11 – சௌத்தாம்ப்டன்
ஒருநாள் போட்டிகள்
ஜூலை 14 – பர்மிங்காம்
ஜூலை 16 – கார்டிஃப்
ஜூலை 19 – லார்ட்ஸ்
ஆகஸ்ட் மாதத்தில்... இலங்கை சுற்றுப்பயணம்
2 டெஸ்ட்
செப்டம்பர் மாதத்தில்... வங்கதேச சுற்றுப்பயணம்
3 ஒருநாள் போட்டிகள்
3 டி20 போட்டிகள்
செப்டம்பர் – அக்டோபர் - ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணம்
3 டி20 போட்டிகள்
மேற்கிந்திய தீவுகள் அணியின் இந்தியா வருகை
3 ஒருநாள் போட்டிகள்
5 டி20 போட்டிகள்
அக்டோபர் – நவம்பர் மாதத்தில்... நியூசி. சுற்றுப்பயணம்
2 டெஸ்ட்
3 ஒருநாள் போட்டிகள்
5 டி20 போட்டிகள்
டிசம்பர் மாதத்தில்... இலங்கை அணியின் இந்தியா வருகை
3 ஒருநாள் போட்டிகள்
3 டி20 போட்டிகள்
இந்தாண்டில் மட்டும் இந்திய அணி மொத்தமாக 18 ஒருநாள் போட்டிகளிலும், 29 டி20 போட்டிகளிலும் (உலகக் கோப்பை தொடரைச் சேர்க்காமல்), 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவிருக்கிறது. இதனால், 2026 ஆண்டு முழுவதுமே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆண்டாகவே அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.