

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நமீபியா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நமீபியா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 3) அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட அணியை ஜெர்ஹார்டு எராஸ்மஸ் கேப்டனாக வழிநடத்துகிறார்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நமீபியா அணி விவரம்
ஜெர்ஹார்டு எராஸ்மஸ் (கேப்டன்), ஸேன் கிரீன், பெர்னார்டு ஷால்ட்ஸ், ரூபென், ஜேஜே ஸ்மித், ஜேன் ஃபிரைலிங்க், லோரென் ஸ்டீன்கம்ப், மலன் க்ரூகர், நிக்கோல் லாஃப்டி ஈட்டன், ஜேக் பிரஸ்ஸெல், பென் ஷிக்காங்கோ, ஜேசி பால்ட், டைலான் லெய்ச்சர், டபிள்யூபி மைபர்க், மாக்ஸ் ஹெனிங்கோ.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் நமீபியா, நெதர்லாந்தை எதிர்த்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.