

வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்புவதை நிறுத்துமாறு அந்நாட்டு ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்ட நிலையில், வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பப்படுவதை நிறுத்துமாறு அந்நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆலோசகரைக் கேட்டுக் கொண்டதாக வங்கதேச அரசின் ஆலோசகரான ஆசிஃப் நஸ்ருல் கூறியுள்ளார்.
மேலும், வங்கதேசமோ அல்லது அதன் கிரிக்கெட், கிரிக்கெட் வீரர்களை அவமதிப்பதை எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அடிமைத்தனத்தின் நாள்கள் முடிந்து விட்டன என்றும் நஸ்ருல் கூறியுள்ளார்.
இவர் ஏற்கெனவே, டி20 உலகக் கோப்பை 2026-ல் வங்கதேசத்துக்கான போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.
வங்கதேசத்தில் இந்தியர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வரும்நிலையில், அந்நாட்டு வீரரான முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் போட்டியில் விளையாட கொல்கத்தா அணி ஒப்பந்தம் மேற்கொண்டது.
இருப்பினும், ஐபிஎல் போட்டியில் வங்கதேச வீரர் விளையாடுவதற்கு பாஜக உள்பட மத அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்ததால், முஸ்தாபிசுர் ரஹ்மானை கொல்கத்தா அணி விடுவித்தது.
முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டது, இரு நாடுகளுக்கிடையேயான கிரிக்கெட் உறவுகளை மோசமாக்குவதாக சமூக ஊடகங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.