

சிட்னி டெஸ்ட்டில் சுழல் பந்துவீச்சாளர் தேர்வு செய்யாதது குறித்து ஆஸி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு பதிலளித்துள்ளார்.
கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
இந்தப் போட்டியில் டாட் மர்ஃபி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக ப்யூ வெப்ஸ்டர் களமிறக்கப்பட்டுள்ளார்.
மெல்பர்ன் டெஸ்ட்டிலும் சுழல்பந்து வீச்சாளர் இல்லாமலே ஆஸி. களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஆஸி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறியதாவது:
சாதாரணமாக டாட் மர்ப்பி விளையாடி இருப்பார். ஆனால், இது ஸ்டீவ் ஸ்மித்தின் முடிவு.
சுழல் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் விளையாடப் போவதில்லை. எனக்கும் டாட் மர்ப்பி பிடிக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.