

ஆஷஸ் தொடரில் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராகவும் களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
உஸ்மான் கவாஜா ஓய்வுக்குப் பிறகு தான் நிரந்தரமாக தொடக்க வீரராக களமிறங்குவேன என்பது குறித்து டிராவிஸ் ஹெட் பதிலளித்துள்ளார்.
600 ரன்கள் குவித்த டிராவிஸ் ஹெட்
வெள்ளைப் பந்தில் (டி20, ஒருநாள்) ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் டிராவிஸ் ஹெட் சிவப்புப் பந்தில் (டெஸ்ட்டில்) நம்.5 வீரராகவே களமிறங்கி வந்தார்.
இந்த ஆஷஸ் தொடரில் உஸ்மான் கவாஜாவுக்கு வயிறு வலி காரணமாக ஹெட் தொடக்க வீரராக களமிறங்க ஸ்டீவ் ஸ்மித் முடிவெடுத்தார்.
இந்த முடிவு ஆஸி. டெஸ்ட் கிரிக்கெட்டையே அசத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்தத் தொடரில் அதிக ரன்கள் (600 ரன்கள்) குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இது குறித்து டிராவிஸ் ஹெட் பேசியதாவது:
தொடர்ச்சியாக தொடக்க வீரராக விளையாடுவேனா?
இந்தத் தொடரில் நான் பங்களித்த விதம் குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பொதுவாகவே அதிகமான எடைகளைத் தூக்குபவன் இல்லை.
மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் எல்லாம் அதிகமான எடைகளைத் தூக்குபவர்கள். முன்பாக டேவிட் வார்னர் இப்படி செய்துள்ளார்.
இந்த மாதிரியான வீரர்களுடன் நான் பேட்டிங் செய்வது மிகவும் அதிர்ஷ்டம். இந்தத் தொடரில் இப்படியெல்லாம் நடக்குமென நான் நினைக்கவில்லை.
தொடக்க வீரராகவே தொடருவேனா என்பதை முடிவெடுக்க இன்னும் நேரமிருக்கிறது. அடுத்து யாருடன் விளையாடுகிறோம் என்பதைப் பொருத்து இந்த முடிவை தலைமைக் குழுவினர் எடுப்பார்கள்.
எந்த இடத்தில் பேட்டிங் விளையாடினாலும் எனக்கு பிரச்னை இல்லை. அணியின் காம்பினேஷனைப் பொருத்து விளையாடுவேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.