

சிட்னி டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 301 ரன்கள் எடுத்துள்ளது.
இதன்மூலம், இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 119 ரன்கள் முன்னிலை வகித்துள்ளது.
ஆஷஸ் தொடரின் கடைசி போட்டியான சிட்னி டெஸ்ட் கடந்த ஜன.4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 384 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, ஆஸ்திரேலியா 567க்கு ஆல் அவுட்டானது.
இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 301 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் ஜேக்கப் பெதேல் தனது முதல் சதத்தினை அடித்து 142 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.
ஆஸி. சார்பில் பியூ வெப்ஸ்டர் 3, ஸ்காட் போலண்ட் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.