

டி20 உலகக் கோப்பை : இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவிருக்கிறது.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தில்லி, சென்னை, மும்பை உள்பட 5 இடங்களில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தத் தொடருக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள், தங்களை அணிகளை அறிவித்து வருகின்றன. மேலும், கோப்பையை வெல்லும் முனைப்பில் அணிகள் பயிற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில் கவனம் செலுத்தும் விதமாக விக்ரம் ரத்தோர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது.
இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விக்ரம் ரத்தோர், ஜனவரி 18 ஆம் தேதி இலங்கை அணியுடன் இணைகிறார். தொடர்ந்து அவர் மார்ச் 10 ஆம் தேதி இலங்கை அணியுடன் இருப்பார் என்று கூறப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் விக்ரம் ரத்தோர் பணியாற்றியுள்ளார்.
இவர் ஐபிஎல்லில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளாராக பணியாற்றி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.