

மகளிர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சோஃபி மோலினக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸி. ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து விதமான வடிவ போட்டிகளுக்கும் இவர் கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 வயதான சோஃபி மோலினக்ஸ் இடது கை பந்துவீச்சாளர். இவர் பௌலிங் ஆல் ரவுண்டராக இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணியில் 38 டி20 போட்டிகளில் 41 விக்கெட்டுகளும் 17 ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
மகளிர் பிபிஎல் தொடரில் 112 போட்டிகளில் 97 விக்கெட்டுகளும் 1742 ரன்களும் எடுத்து அசத்தியுள்ளார்.
அலீஸா ஹீலிக்குப் பிறகு அனைத்து ஃபார்மெட்டுக்கும் ஒரே கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளர்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.