

பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட விடியோவில் சூர்யகுமார் யாதவ் தனது சக வீரர் சஞ்சு சாம்சனை கிண்டல் செய்யும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இந்திய அணி கடைசி டி20யில் நாளை (ஜன.30) நியூசிலாந்துடன் மோதவிருக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்கிறது.
கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதனால், இந்திய வீரர்கள் கேரளத்துக்கு இன்று வந்தடைந்தார்கள்.
இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் கேரளத்தைச் சேர்ந்தவர். அவரை வரவேற்கும் விதமாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நடந்துகொண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது.
விமான நிலையத்தில் நடந்த இந்தக் காட்சிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
சிஎஸ்கே அணியும் இந்த விடியோவைப் பகிர்ந்துள்ளதால் தமிழக ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தத் தொடரில் மோசமாக விளையாடும் சாம்சன் கடைசி போட்டியில் பிளேயிங் லெவனில் இருப்பாரா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
அடுத்த மாதம் 7ஆம் தேதி டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற இருப்பதால் இந்த கடைசி போட்டி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் மூலம் தெரியவருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.