டி20 உலகக் கோப்பை 2026: அனிருத் இசையமைத்த புதிய பாடல்!

ஆடவர் டி20 உலகக் கோப்பைக்காக அனிருத் இசையமைத்த பாடல் குறித்து...
The poster for the new World Cup song composed by Anirudh.
அனிருத் இசையமைத்த உலகக் கோப்பைக்கான புதிய பாடலின் போஸ்டர். படம்: ஐசிசி
Updated on
1 min read

2026 டி20 உலகக் கோப்பைக்காக அனிருத் இசையமைத்த பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

”பீல் த த்ரில்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஹைசன்பர்க் எழுதிய இந்த ஐசிசியின் புதிய பாடலுக்கு அனிருத் இசையமைத்து பாடியுள்ளார்.

இந்தப் பாடலை ஸ்பாடிபை, ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக், ஜியோ சாவ்ன், யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூலில் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு, கேட்டு ரசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடவருக்கான டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் பிப்.7ஆம் தேதி முதல் இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன.

வங்கதேச அணி இந்தியாவில் விளையாட மறுத்ததால், அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சென்னை, மும்பை, தில்லி உள்பட மொத்தம் 5 இடங்களில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இலங்கையில் மூன்று திடல்களில் இந்தப் போட்டிகள் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது கடைசி டி20யில் நியூசிலாந்தை இன்று எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பைக்கு முன்பாக வெற்றியுடன் இந்தப் போட்டியை முடிக்க வேண்டுமென வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் இருக்கிறார்கள்.

Summary

Feel the Thrill: The official song for ICC Men's T20 World Cup 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com