இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

எனது கேப்டன்சி பயணத்தில் கடைசி 3 மாதங்கள் மிகவும் கடினமானவை: பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணியின் கேப்டனாக கடந்த மூன்று மாதங்கள் தனது பயணம் மிகவும் கடினமாக இருந்ததாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லமுடன் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - படம் | பென் ஸ்டோக்ஸ் (இன்ஸ்டாகிராம்)

Published On :

இங்கிலாந்து அணியின் கேப்டனாக கடந்த மூன்று மாதங்கள் தனது பயணம் மிகவும் கடினமாக இருந்ததாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதன் பின், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டனாக கடந்த மூன்று மாதங்கள் தனது பயணம் மிகவும் கடினமாக இருந்ததாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பென் ஸ்டோக்ஸ் பதிவிட்டிருப்பதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுவதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை நான் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கேப்டனாக என்னுடைய இந்த பயணத்தில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் இருந்துள்ளன. என்னுடைய கேப்டன்சி பயணத்தில் கடந்த மூன்று மாதங்கள் மிகவும் கடினமானவை. கடந்த மூன்று மாதங்களில் நான் பல்வேறு சோதனைகளுக்கு ஆளானேன். இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்ட அனைவரும் இந்த காலக் கட்டத்தை கண்டிப்பாக கடந்து வந்திருப்பார்கள் என என்னால் உறுதியாகக் கூற முடியும்.

பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லமுடன் இணைந்து இங்கிலாந்து அணியை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். எங்களுடைய அனைத்து உழைப்பையும் கொடுக்கப் போகிறோம். எங்களுடைய இந்த பயணத்தில் நிறைய தவறுகள் செய்துள்ளோம். அந்த தவறுகளிலிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளோம். வெற்றியைக் காட்டிலும் தோல்வியிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Ben Stokes has said that the last three months of his journey as England captain have been very difficult.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.