காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள ஆகாஷ் தீப்புக்குப் பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர் இன்னும் நான்கு நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், அணிகள் அனைத்தும் தீவிரமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. வருகிற மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகியுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து ஹர்ஷித் ராணா மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் காயம் காரணமாக விலகியுள்ளனர். முதல் கட்ட போட்டிகளில் மதீஷா பதிரானாவும் விளையாடமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள ஆகாஷ் தீப்புக்குப் பதிலாக இடதுகை வேகப் பந்துவீச்சாளரான சௌரப் துபே மாற்று வீரராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காயம் காரணமாக ஆகாஷ் தீப் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக இடதுகை வேகப் பந்துவீச்சாளர் சௌரப் துபே கொல்கத்தா அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ரூ. 30 லட்சத்துக்கு கொல்கத்தா அணியில் இணைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 வயதாகும் சௌரப் துபே இதற்கு முன்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அங்கம் வகித்துள்ளார். இருப்பினும், அவர் இதுவரை ஒரு ஐபிஎல் போட்டியில் கூட விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
A replacement player has been added to the Kolkata Knight Riders squad to replace Akash Deep, who has been ruled out of the IPL series due to injury.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேகேஆர் அணியில் இணைந்த பதிரானா..! பிளேயிங் லெவனில் விளையாடுவாரா?

பிரைடான் கார்ஸுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜாக் எட்வர்ட்ஸுக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!

ஐபிஎல் தொடரிலிருந்து ஆகாஷ் தீப் விலகல்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

