ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிதீஷ் குமார் ரெட்டி விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக சமரன் அறிமுக வீரராக களமிறங்குகிறார். ஹர்ஷ் துபேவுக்குப் பதிலாக ஹர்ஷல் படேல் விளையாடுகிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பிளேயிங் லெவனில் டிம் செய்ஃபெர்ட்டுக்குப் பதிலாக ஃபின் ஆலன் சேர்க்கப்பட்டுள்ளார். ரமன்தீப் சிங்குக்குப் பதிலாக மணீஷ் பாண்டே பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார்.
தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று வலுவாக உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத், வெற்றிநடையை தொடரும் முனைப்பில் களம் காண்கிறது.
Summary
In the IPL match against the Kolkata Knight Riders, Sunrisers Hyderabad won the toss and elected to bat.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எலிமினேட்டர் போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் பந்துவீச்சு!

ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் பேட்டிங்; முதல் இரண்டு இடங்களுக்குள் நிறைவு செய்யுமா?

பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்குமா சிஎஸ்கே? ஹைதராபாதுக்கு 181 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சு!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




