ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடர் வருகிற மே 31 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடர் ஜூன் 6-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி ஜூன் 6-ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில், ஒருநாள் தொடர் ஜூன் 14 முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி ஜூன் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் ஜூன் 17 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறுகின்றன.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், வேலைப்பளு காரணமாக ஜஸ்பிரித் பும்ராவுக்கும், உடல்தகுதி காரணமாக ரோஹித் சர்மாவுக்கும் இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டு வடிவிலான ஆட்டங்களுக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளதால், ஜஸ்பிரித் பும்ராவை தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடவைப்பது அவசியமில்லை எனவும் கூறப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பல போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அதனால், அவர் 100 சதவிகிதம் உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது.
Summary
Doubts have arisen as to whether both Rohit Sharma and Jasprit Bumrah will play in the ODI series against Afghanistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு; கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பும்ரா, ஜடேஜா முதலிடம்..! டாப் 10 பட்டியலில் ஜெய்ஸ்வால், கில்!

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்; முக்கிய ஆஸி. வீரர்கள் விளையாடுவதில் சிக்கல்!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு ஹிட்மேன் ரோஹித் சர்மா ரெடி!
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


