10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

இந்திய அணியில் இடம் பிடித்த 7 ஜிடி வீரர்கள்..! மும்பையிலிருந்து குஜராத்துக்கு மாறிய லாபி?

இந்திய அணியில் இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் குறித்து...

7 Gujarat Titans Players Secure Spots in the Indian Squad

இந்திய அணியில் இடம் பிடித்த 7 குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள். - படங்கள்: எக்ஸ் / குஜராத் டைட்டன்ஸ்.

Published On :

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் 8 பேர் தேர்வாகியிருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 6 ஆம் தேதி தொடங்குகிறது. அதன் பின், ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், ரிஷப் பந்த், தேவ்தத் படிக்கல், நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதர், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜுரெல்.

ஒருநாள் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே.

இதில் குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்: ஷுப்மன் கில், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதர், குர்னூர் பிரார். இந்த ஏழுவரும் டெஸ்டில் தேர்வாகியுள்ளார்கள். ஒருநாள் தொடரில் கில், சுந்தர், பிரசித், பிரார் ஆகியோரும் இருக்கிறார்கள்.

முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் வீரர்கள் அதிகமாக இந்திய அணிக்குத் தேர்வாகுவார்கள். தற்போது, கேப்டன் குஜராத் அணியில் இருப்பதால் அந்த வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மும்பையிலிருந்த லாபி தற்போது குஜராத்துக்கு மாறியிருக்கிறது. ஆனாலும் நல்ல வீரர்கள் புறக்கணிக்கப்படுவது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Summary

7 Gujarat Titans Players Secure Spots in the Indian Squad! A Lobby Shift from Mumbai to Gujarat?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.